மனைவி கூறிய வார்த்தையால் கணவன் எடுத்த விபரீத முடிவு!

 கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற  கிராமப்  பகுதியில் இன்று(10) காலை  டைனமைட்  வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மனைவி கூறிய வார்த்தையால்  கணவன் எடுத்த விபரீத முடிவு!



பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.



ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.


வெளிநாட்டில் இருந்து வந்து அன்புடன் வாழவில்லை

வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சில வாய்தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.



வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனை அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார்.



இதன் காரணமாக மனம் சோர்வுற்ற கணவன் வெடித்து உயிரிழப்பேன் என பலரிடம் கூறியுள்ளார்.




 கூறியபடியே இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தனது இடுப்பில்  வெடிக்கும் டைனமட் பொருளைக் கட்டிக் கொண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.




இறந்தவரின் சடலம் ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன.



மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்