வவுனியாவில் மனதை உருக வைத்த விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நண்பர்கள் அஞ்சலி! vavuniya news

(vavuniya tamil news-tamillk) வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் கடந்த 01.01.2022 அன்று பிக்கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வராசா றஜீபன் (வயது 37) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

vavuniya


அன்னாரின் நினைவாக 

அவரின் இரண்டாவது வருட நினைவு தினத்தினையடுத்து அவரின் நண்பர்கள் விபத்து இடம்பெற்ற தாண்டிக்குளம் பகுதியில் அன்னாரின் உருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியமையுடன் அப்பகுதியின் வீதியோரங்களில் அன்னாரின் நினைவாக மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.

vavuniya tamil news


கவிதையுடன் நண்பர்களின் உணர்வு

பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய் என்ற கவிதையுடன் நண்பர்களின் உணர்வு அவரின் பிரிவினை உணர்த்தி நின்றமை வீதியில் சென்றவர்களின் மனதை நெகிழவைக்கும் நிகழ்வாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vavuniya tamil news


இவ் நினைவஞ்சலி நிகழ்வில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்