(vavuniya tamil news-tamillk) வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட இளைஞன்
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் (30.12.2024) சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



