(vavuniya news-tamil lk news) வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா இன்றையதினம் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா, வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி
சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Vavuniya-news



