கொழும்பில் சடலம் போன்ற உருவங்களுடன் பாரிய ஆர்ப்பாட்டம்....!

 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

srilanka tamil news


கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய அவர்களே பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



அத்துடன், போலி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு காரணமான முன்னாள் அமைச்சர் கெஹலியவை கைது செய்ய வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்நிலையில், இந்த போராட்டம் நடந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்