(srilanka tamil news-tamillk) கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை உடனடியாக முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவித்துள்ளது.
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக வாயு ஒன்று சுற்றுச்சூழலில் கலக்கப்பட்டுள்ளது.
வாயு புகையாக காற்றில்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீப்பிடித்த குறித்த தொழிற்சாலையில் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் வேளையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வாயு புகையாக காற்றில் கலந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலில் குளோரின் வாயு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாலை 5.30 மணியளவில் எரிவாயு கசிவைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் புகைமூட்டம் பரவி வருவதால் ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹோமாகம பொலிஸார் கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களுக்கும் அறிவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |