(srilanka tamil news-tamillk) பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை வீதிக்கு அருகில் நிறுத்தி,
தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி,
முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பின்னால் அமர்ந்திருந்த நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரை நடிகை தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து தப்பித்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி நடிகையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டி கொழும்பு ஹொரணை வீதியூடாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |