கொழும்பில் அமைச்சர் கெஹலியவை உடனடியாக கைதுசெய்யுமாறு ஆர்பாட்டம்! srilanka tamil news

 (srilanka tamil news-tamillk) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், 


காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அமைச்சர் என்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியதாகவும், 


இதன் காரணமாக அவர் உடனடியாக கைதுசெய்ப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டவிரோத மருந்து இறக்குமதியால்

மேலும், நாட்டிற்கு கொண்டுவரபட்ட சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலியானதாகவும், இதற்கு கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




இதற்கமைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, நீர்த்தாரை பிரயோக வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்