இந்தியா உட்பட 33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை! tamil lk news

 

tamil lk news



இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.


ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காகவும் சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்காகவும் அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 4-ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கான நிபந்தனைகள் பின்வருமாறு..

1.சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள், அப்படி வரும்போது அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் 15 நாட்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கிடையாது.


2.விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலா வருவோருக்கு மட்டுமே பொருந்தும்.

3.அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.

4.விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்