யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாடகர் ஹரிகரன்! tamil lk news

 (jaffna news) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

jaffna tamil news


யாழ். சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (07) மதியம் 11:30 மணியளவில் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்