ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி! tamil lk news

 இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

tamil lk news


கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இன்று(7) பெற்றுக்கொண்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், இலங்கை கடற்படையின் 14வது கடற்படை தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதியுமாவார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஜக்கிய மக்கள் சக்திக்கு தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்