(jaffna news) யாழில் நேற்றையதினம் இரவு நடைபெற்ற தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி குழப்பநிலை காரணமாக சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டது.
இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் நேற்று (09.02.2024) நடைபெற்றுள்ளது.
இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
jaffna-news