வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு! vavuniya news


tamil lk news-vavuniya news


(vavuniya tamil news) வவுனியா-புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


யானையின் சடலம் இன்று(09.02.2024) மீட்கப்பட்டுள்ளது.


குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இறப்பு தொடர்பாக விசாரணை


அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


உயிரிழந்த யானை 24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்