பாண் எடை சரியாக உள்ளதா? இன்று முதல் சுற்றிவளைப்பு! tamil lk news

 

tamil lk news

பாண் எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க பாண் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய இன்று (05) முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

பாண் விற்பனை

மேலும், பாணின் எடையை காட்சிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து கடைகளுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்