வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் தடம்புரண்டு விபத்து! tamil lk news

 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் மலையடிவாரப் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் கார் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

tamil lk news


இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த விபத்துச் சம்பம் இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


எனினும் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.


தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்  என மூதூர் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்