நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவம்; ஆலய வளாகத்தில் பதற்றம் !

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவம்; ஆலய வளாகத்தில் பதற்றம் ! - Tamil lk News

 

Tamil lk News


Jaffna News 

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.



 நல்லூர் திருவிழா காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை.



 அதேவேளை அத்துடன் பாதணிகளுடன் செல்வதற்கும் அனுமதி இல்லை. இந்நிலையில் இராணுவத்தினரின் குறித்த வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.



 ஆலய புனித்தத்தை கெடுக்கும் விதமாக ,நல்லூர் ஆலய முன் வாயிலால் இராணுவ வாகனம் திடீரென நுழைந்தது எதற்காக என்பது குறித்த கேள்வியும் எழுத்துள்ளது.

Tamil lk News


 அதேவேளை கடந்த வருடம் திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்