வாகனங்கள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்! tamil lk news

tamil lk news


 நிட்டம்புவ பிரதேசத்தில் வாடகை காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட காரை உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கார் அநுராதபுரத்திலிருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.


எனவே வாகனங்களை வைத்திருப்பவர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்