பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்! வவுனியாவில் பொதுமக்கள் விசனம்! vavuniya news

tamil lk news-vavuniya news


 (vavuniya tamil news) வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு - இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் (09.02.2024) பொதுமக்கள் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்கள்

இந்நிலையில் காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்கவைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

அவசரத்தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தோம் எனினும் ஒருநாள் முழுவதும் நின்று கூட அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தாமதம் காரணமாக கடமையில் இருந்த அலுவலர்கள் மீதும் தமது கோபத்தை செலுத்தியுள்ளனர்.

அத்துடன், வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டவர்களிற்கான விண்ணப்பங்கள் இன்றையதினம் குறித்த அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருந்தனர்.


இதேவேளை குறித்த அலுவலகத்தில் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதால் தொடர்ச்சியாக இந்தநிலமை ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



எனினும் தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து வினைத்திறனான புதிய முறைமை ஒன்றை உருவாக்கி அதனை சீர்செய்ய முடியும் என பொதுமக்களால் சுட்டிக்காட்டியுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்