இலங்கையிலிருந்து சென்ற நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.....!

 

tamil lk news

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வரும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் அப்பகுதிக்கு கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் கடலோர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து கடலோர பொலிஸார் தஞ்சம் அடைந்த அகதிகளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்து அப்பிரதேச பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்