தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.....!

 

tamil lk news

மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலதுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதியே இவர் உயிரிதுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்நிலையில் சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்