எடை குறைவான பாணை விற்பனை செய்த 305 பேக்கரிகள், கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

tamil lk news


 கடந்த மூன்று மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது  எடை குறைவான பாணை  விற்பனை செய்த 305 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக அளவீடு, தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  


994 பேக்கரிகள் மற்றும் கடைகள்  சோதனை  செய்யப்பட்டு அவற்றில் 190 பேக்கரிகள் மற்றும் 115  கடைகள் அடையாளம் காணப்பட்டன. கொழும்பில்  34 பேக்கரிகளும் 24 கடைகளும்  கண்டுபிடிக்கப்பட்டன.



அதன்படி, குறைந்த எடை கொண்ட  பாண்களை விற்பனை செய்த பல பேக்கரிகள் மற்றும் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்