காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத செயல் : காப்பாற்றிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு....!

 

tamil lk news

காலி முகத்திடலை அண்மித்த கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். 


கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார்.

பொலிஸ் ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். 


அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்