மன்னாரில் கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்...!

 

manner tamil news-tamil lk news

(manner news) மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்


உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த (சந்துரு)சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்றைய தினம் (7) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இளைஞன் பலியாகியுள்ளார்.



விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்