ஜனாதிபதியிடமிருந்து அரசாங்க நிறுவனங்களுக்கு உத்தரவு....!

 

tamil lk news-srilanka tamil news

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய அமைச்சுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



சிங்கள தமிழ் புத்தாண்டின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்