73 வயது மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்!!

 

srilanka tamil news-tamil lk news

மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 65 வயது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவர் களனி(kelani) பிரதேசத்தைச் சேர்ந்த எ. எ.ரி. சிறிசேன என்ற 73 வயதுடைய நபராவார்.


இவர், தனது வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், 


இவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இவர் பலமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்