திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை...! Tamil lk

 

tamil lk news - srilanka

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.


அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம்(26) சடுதியாக தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.



முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 695,120 ரூபாவாக காணப்படுகின்றது.


24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 179,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.


21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 171,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.



எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 188,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்