விபச்சார விடுதியை நடத்தி வந்த தாய், மகள்! வசமாக சிக்கிய சந்தேகநபர்கள்....!

 

tamil lk news - srilanka

வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்தி வந்த குற்றச்சாட்டில் தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


கண்டி - ஹந்தானை பகுதியில் விபச்சார விடுதியை நடத்தி வந்த மகள் முகாமையாளராகவும் தாய் காசாளராகவும் செயற்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


குறித்த விபசார விடுதி தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த விபசார விடுதி குறித்து இரு வாரங்களாக விசாரணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் 5,000 ரூபாவிற்கு பெண்ணொருவரை கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்