சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை( srilanka) தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சேவை தொடர்பான அறிவிப்பை தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ எம்.ஆர்.பி சத்குமார அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தபால் நிலையங்கள்
அதன்படி பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள பிரிவுகளைக் கொண்ட தபால் / துணை தபால் நிலையங்கள் மூலம் பண விநியோகம்,
வெளிநாட்டு சேவை மற்றும் பொது பார்சல் விநியோகம் ஆகியவற்றின் விசேட சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .
Tags:
srilanka