இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்....!

tamil lk  news


இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குறித்த நிலநடுக்கமானது இன்று (09.04.2024) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என கூறப்படுகிறது.



மேலும் பப்புவா மாகாணத்தின் ரன்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்