ஈரானின் (Iran) இஸ்ஃபஹான் (Isfahan) விமான தளத்தின் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலையடுத்து, ஏற்பட்டிருக்கக்கூடிய சேதங்களை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் சந்தேகத்துக்கிடமான தாக்குதலை நடத்தியதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது ஏப்ரல் 13 அன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனையடுத்து, ஏப்ரல் 19 அன்று ஈரானின் அணு ஆய்வு மையப் புள்ளியான இஸ்ஃபஹான் விமானத் தளம் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்காக உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் SAR எனும் தொழிநுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மற்றைய தொழில்நுட்பங்களை விட இந்த தொழில்நுட்பம், இரவு நேரங்களில் மிக துல்லியமாக படம் எடுக்கும் திறனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.