வாகன இறக்குமதி செய்வது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.
அதன்படி, 6 - 15 இருக்கைகள் கொண்ட 750 வான்கள் (மின்சார மற்றும் கலப்பின உட்பட), குறிப்பாக சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 16 - 30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் மற்றும் 30 - 45 இருக்கைகள் கொண்ட 250 பேருந்துகள் என்பவற்றை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.