நிலவிற்கு நிலையான நேரம்: நாசாவுக்கு வெள்ளை மாளிகை விடுத்துள்ள உத்தரவு...!

 நிலவிற்கான நிலையான நேரத்தை உருவாக்க நாசாவுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.


இதன்படி "ஒருங்கிணைந்த லூனார் டைம்" (எல்.டி.சி) என்ற பெயரில் இதை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

tamil lk news


அதிகரித்து வரும் விண்வெளிப் பந்தயத்தை கருத்தில் கொண்டு, விண்வெளியில் சர்வதேச விதிமுறைகளை அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் (OSTP) தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''நாசா ஏனைய அமெரிக்க அரசு அமைப்புகளுடன் இணைந்து "ஒருங்கிணைந்த சந்திர நேரம்" (எல்.டி.சி) அமைப்பதற்கான திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.


2023இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சந்திரனுக்கு அதன் சொந்த நேர மண்டலத்தை வழங்குவதற்கான இதே போன்ற திட்டங்களை அறிவித்தது.



இதன்படி 2022இன் பிற்பகுதியில் நெதர்லாந்தில் உள்ள பல்வேறு விண்வெளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த யோசனை தோன்றியது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பொதுவான சந்திர குறிப்பு நேரத்தின் அவசரத் தேவையை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் விண்வெளியில் நேரத்தை அமைப்பது பற்றிய இந்த கேள்வி கடந்த காலத்தில் நாசா கையாண்டது.


இதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான சொந்த நேர மண்டலம் இல்லை என்றாலும், அது ஒருங்கிணைக்கப்பட்ட யுனிவர்சல் டைம் அல்லது UTC(Coordinated Universal Time) இல் தற்போது இயங்குகிறது.



இது அணுக் கடிகாரங்களால் உன்னிப்பாக வைக்கப்படும் ஒரு தரநிலையாகும். UTC ஐப் பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா , ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா இடையே ஒரு ஒப்பந்தம் காணப்படுகிறது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்