ஓட்டோ தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளைஞர் ஒருவர் தனது ஓட்டோவை நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் உள்ள ஓட்டோ தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்த ஏனைய சாரதிகள் அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டனர்.
- மகனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தாய்க்கு ஏற்பட்ட கதி...!
- தகாத உறவால் 23 வயதான இளம் மனைவி கொலை; தற்கொலை என நாடகமாடிய முல்லைத்தீவு கணவன்!அதிர்ச்சி சம்பவம்
- கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம்-ஆபத்தான நிலையில் 7 பேர்
இதன்போது, அங்கிருந்த இளைஞரின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற முற்பட்டபோது தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்தார்.
சிகிச்சை
இந்நிலையில் அவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(28) உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Srilanka Tamil News....)