க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை! வடக்கு மாணவர்களின் நலன் எடுத்துள்ள நடவடிக்கை

 

tamil lk news

நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப் போக்குடன் செயற்படுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


வடக்கு மாகாண மின்சார சபையின் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட மின்சார சபையின் பொது முகாமையாளர்களுடன் நேற்று (09.05.2024) மாலை அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டடு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பரீட்சை காலத்தின் போது மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்கும் செயற்பாடுகளை துறைசார் தரப்பினர் அண்மையில் முன்னெடுத்துள்ளனர்.


இந்நிலையில் குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின்னிணைப்புகளை துண்டிப்பதில் நெகிழ்வுப் போக்கை பின்பற்றுவது மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாக அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


இதையடுத்தே சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் குறித்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.




மேலும், நெடுந்தீவில் ஏற்படும் மின்சார பிரச்சினைக்கு தீர்வினை காண புதிய மின்பிறப்பாக்கி ஒன்றினை உடனடியாக வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Jaffna,kilinochchi tamil news......)



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்