கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (30.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஏ9 வீதியில் (A9 ROAD) இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும்
இதன்போது, தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச விசாரணை ஒன்றே தேவை : மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்து
மேலும், சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(kilinochchi Tamil News...)