யாழ்(Jaffna) போதனா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவசர சிகிச்சை பிரிவு
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வாள்வெட்டுக்கு இலக்கான தனது நண்பனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த இளைஞர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளுடன் புகுந்தார்.
இது குறித்து கேள்வியெழுப்பிய வைத்தியசாலை உத்தியோகத்தர் மீதும் குறித்த இளைஞர் தாக்குதல் மேற்கொண்டார்.
இதனையடுத்து குறித்த இளைஞரை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் இருந்த குறித்த இளைஞர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.