மல்லாவி துணுக்காய் பகுதியில் வீதி விபத்து! இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

 முல்லைத்தீவு(Mullaitivu,)- துணுக்காய் பகுதியில் இன்று பிற்பகல்  விபத்தொன்று இடம்பெற்றுள்ளது

tamil lk news


துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதியே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது 

 இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற துணுக்காய் கல்விளான் பகுதியை சேர்ந்த டேவிட் நிஷாந்த் (28) என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 


இதேவேளை காயங்களுக்குள்ளான காரில் பயணித்த 4வயது குழந்தை உட்பட மூவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 


மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்