கொழும்பில் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் - சந்தேகநபர் கைது!

 இலங்கைக்கான(Srilanka) ஈரான்(Iean) தூதுவர் மீது கொழும்பில்(Colombo) வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


அதாவது கொழும்பிலுள்ள கட்டிடத் தொகுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்த தாக்குதல் நேற்றைய தினம் நடாத்தப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


மேலும் சந்தேகநபர் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Srilanka TamilNews.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்