யாழ்ப்பாண(Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சம்பள முரண்பாடு, எம்.சி.ஏ. கொடுப்பனவை அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டமானது யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக சென்று பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்றது.
இவர்கள், கடந்த மே மாதம் 02 முதல் இன்றைய தினம் வரையிலான 44 நாட்கள் தொடர் பகிஸ்கரிப்பு போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Tamil News
Tags:
jaffna