காதலிக்காக அடிதடியில் குதித்த மாணவர்கள்...!

காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி(Kandy) - திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.


சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.



தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

tamil lk news



சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Srilanka tamil News
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்