சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு ஆரம்பிக்கப்படமாட்டாது! வெளியான அறிவிப்பு..!

tamil lk news


 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



இன்று(27.06.2024) ஆரம்பிக்கவிருந்த குறித்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதேவேளை சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்