இலங்கையின் சில இடங்களில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் அதிகமான மழை...!

 இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


 வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

tamil lk news


 அந்தவகையில், சபரகமுவ,மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். 


 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 



 மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்