வேகமாக பரவும் சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள்! பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

 தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.


பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என மேலும் தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாகவும்,



வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னரே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Srilnka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்