யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் நபர் கைது...! Jaffna News

 யாழில் (jaffna) போலி நாணயத்தாள் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கை யாழ். திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் (7.6.2024) கோப்பாய்  காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து (colombo) தனது குடும்பத்துடன் நபர் ஒருவர் அரியாலை பகுதிக்கு வருகை தந்து வீடொன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.


நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் வெற்று தாள்களையும் போலி இயந்திரத்தினையும் விற்பனை செய்ய முயன்ற பொழுது கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்ததோடு சான்று பொருட்களையும் கைப்பற்றினர்.



இதனையடுத்து சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சோதனையிட முற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த குடும்பத்தினர் தப்பிசென்றிருந்தமை தெரியவந்தது.



குறித்த நபருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

jaffna Tamil News.....!

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்