தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நடவடிக்கை
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த விடயம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
The brutal beating of a 4-year-old girl has rightly horrified the country. While the judicial process will address the perpetrators, we must prioritise the child’s well-being, which will require swift and decisive action from state officials. It’s important to understand and…
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 6, 2024



