வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை...!

 குருணாகல்(Kurunegala) மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

(Srilnka Tamil News.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்