நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் அனுராதா தென்ன கோன் தெரிவித்துள்ளார்.


அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை 320 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சம்பா அரிசிக்கான தட்டுப்பாடும் தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ளது.

tamil lk news


நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை பயன்படுத்தி அரிசி உற்பத்தி செய்ய இயலாது என்றும், அதற்கு சில வழிமுறைகளை கையாண்டு, திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


கடந்த காலங்களில் கீரி சம்பா, சம்பா அரிசியை உணவகங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சாமானியர்களும் இந்த அரிசி வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.


இதன் காரணமாக கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு நாட்டில் பெரும் கிராக்கி நிலவுவதுடன், 



தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்