ரணிலுடன் இணைந்த மொட்டு கட்சியின் 92 எம்.பிகள்!

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் இன்று (30) ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எம்.பி.க்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

tamil lk news


ஜனாதிபதியை சந்தித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியாக களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில் அதனை மீறி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்