வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சுற்றிவளைப்பு- 60 வர்த்தக நிலையங்களுக்கு சிக்கல்

 வவுனியாவில்(Vavuniya) 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார செபை தெரிவித்துள்ளது.


யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

tamil lk news


இதன்போது, ஒழுங்கான முறையில் தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Srilanka Tamil News (Vavuniya News)



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்