நேபாளத்தில் 19 பயணிகளுடன் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து மீட்பு பணிகள் தீவிரம்....!

 

tamil lk news

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. 


காத்மாண்டு, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே விழுந்து நொறுங்கியது. 


ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.


ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது. 



விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

tamil lk news


விமான விபத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்